அனைவருக்கும் அன்பு வணக்கம். மாண்புமிகு முதலமைச்சர் தளபதி M. K. Stalin அவர்களின், தொலைநோக்கு பார்வை, மேலாண்மை, திட்டமிடல் மற்றும் செயல்படுத்தும் விதத்தால், ஒரு வருடத்திற்குள், தமிழ்நாடு மின்சார வாரியம் பெற்ற முன்னேற்றங்கள் குறித்து உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.
திராவிடியன் மாடல் நல்லாட்சி புரியும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலால் மட்டுமே, 2021-22 ஆம் ஆண்டில் மட்டும், 2200 கோடி ரூபாய் அளவுக்கு செலவினங்களைக் குறைத்து, சேமிப்பை உருவாக்கியுள்ளது வாரியம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
விழித்திருக்கும் நேரத்தில் எல்லாம் உழைத்துக்கொண்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நிர்வாக திறனால் மட்டுமே, 2020-21ல் ரூ 15,157 கோடியாக இருந்த நஷ்டம், இந்த வருடம் ரூ 12,991 கோடியாக குறைந்திருக்கிறது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வகுத்து தந்திருக்கும் திட்டங்களை, விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டுவருவதன் மூலம், மரபுசார மின் உற்பத்தி திட்டங்களில் அடுத்த இரண்டு ஆண்டுகளில், 3ஆம் இடமிருக்கும் தமிழகம் முதலிடத்திற்கு வரும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிறுவுதிறன் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களின் மேற்பார்வையில், ஒரே ஆண்டில் 1265 மெகாவாட் அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திட்டமிடலால், 2021-22 ஆம் ஆண்டில் மத்திய மின்சார ஆணையம், நீர் மின்சார உற்பத்தியில் நிர்ணயித்த இலக்கை விட 1600 மில்லியன் யூனிட்களை கூடுதலாக உற்பத்தி செய்து சாதனை புரிந்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இதுவே அதிகமான உற்பத்தி ஆகும்.
மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலால், கடந்த ஆண்டில் 5,704 மில்லியன் யூனிட் அதிகமாக உற்பத்தி செய்து, குறிப்பிடத்தக்க சாதனையை மின்சார வாரியம் செய்திருக்கிறது. உற்பத்தி 1,07,064 மில்லியன் யூனிட்டிலிருந்து 1,12,768 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது.
இலவச விவசாய மின் இணைப்பிற்காக 4,52,777 விவசாயிகள் காத்திருந்த நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களின் திட்டமிடலால், முதல் 1 லட்சம் பேருக்கு இலவச மின் இணைப்பு 6 மாதங்களுக்குள் வழங்கப்பட்டது. இது தமிழக மின்வாரியத்திற்கு ஒரு மைல் கல்.
மாண்புமிகு தளபதி அவர்கள், அதிகரிக்கும் மின் தேவை, உற்பத்தியை அதிகரிப்பு, கட்டமைப்பை வலுப்படுத்தல், கண்காணிப்பு & மேற்பார்வையை சீரமைத்து தரமான, தடையற்ற மின்சாரத்தை வழங்கிட தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு TNEB 2.0 என்னும் நீண்ட கால திட்டமிடல் தந்திருக்கிறார்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு பார்வைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக, வருகின்ற வருடங்களில் தமிழ்நாடு எட்டப்போகும் சமூக மற்றும் தொழில் வளர்ச்சியை கணக்கிட்டு, இந்த வருடம் மட்டும் 24036 மின்மாற்றிகள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன.
2021-22ல் மட்டும் 216 துணை மின் நிலையங்களை வழங்கியிருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். 193 து.மி.நிலையங்களுக்கு இடங்கள் கண்டறியப்பட்டு பணிகள் ஆரம்பிக்க இருக்கின்றன. மீதி 23 து.மி.நிலையங்களுக்கு இடம் தேர்வு நடைபெறுகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், இதுவரை இல்லாத அளவில், பணி காலத்தில் இறந்தவர்களின் 744 வாரிசுதாரர்களுக்கு, ஒரே ஆண்டில் பணி ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.
மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களின் தலைமையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் மேலும் பல தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி, மின் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு, பல்வேறு சாதனைகள் படைக்கும் என உளமார தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி..