தமழ்நாட்டில் இன்று மேலும் 11,805 பேருக்கு கொரானா தொற்று உறுதி
23207 பேர் டிஸ்சார்ஜ்
267 பேர் உயிரிழப்பு
#corona

தமழ்நாட்டில் இன்று மேலும் 11,805 பேருக்கு கொரானா தொற்று உறுதி
23207 பேர் டிஸ்சார்ஜ்
267 பேர் உயிரிழப்பு
#corona
விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மோகன் நியமனம்
விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருந்து வரும் திருமதி.ஸ்ரேயா பி சிங், நாமக்கல் மாவட்ட ஆட்சியராக நியமனம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக ஸ்ரீதர் நியமனம்.
#ias
தேநீர் கடைகள் திறக்க அனுமதி.
நாளை முதல் 27 மாவட்டங்களில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி. காலை 6 முதல் மாலை 5 வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி.
தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி இல்லை..
#tea
ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரியில் இருந்து 1227 கிலோ கஞ்சா பறிமுதல்
ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் டெல்லிக்கு சென்ற லாரியில் இருந்து சுமார் 1.1 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1227 கிலோ கஞ்சா பறிமுதல், இருவர் கைது
#odisa #oxigen
RT-PCT கொரோனா பரிசோதனை முடிவுகளை பொதுமக்கள் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தெரிந்து கொள்ளும் வசதியை சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது
#chennai
தூத்துக்குடியில் இங்கிலாந்து நாட்டுக்காரர் கைது
போதைப் பொருள் கடத்துவதற்காக பதுங்கியிருந்தபோது கைது
கியூ பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை
#news
குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
#TamilNadu | #MetturDam | #MKStalin |
மருத்துவ நிபுணர் குழு பிரதமர் மோடியிடம் அறிக்கை :
அரைகுறையாக தடுப்பூசி செலுத்தப்பட்டால் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தூண்டிவிடும்
பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவது தற்போதைய நோக்கமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தடுப்பூசி #corona
#IndiaFightsCorona:
#COVID19 தடுப்பூசி நிலவரம் (11 ஜூன் 2021, இரவு 8.00 மணி வரை)
✅இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 24.93 கோடிக்கும் மேலாகும்.
(24,93,16,572)
✅முதல் டோஸ்: 20.14 கோடி
(20,14,30,273)
✅இரண்டாம் டோஸ்: 4.78 கோடி
(4,78,86,299)
#StaySafe
தமிழ்நாட்டில் 32 மருத்துவர்கள் உயிரிழப்பு!
#Covid19India | #Covid19SecondWave |
ஒரே நாளில் 4,002 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!
#COVID19India | #COVIDSecondWave | #COVID19Update | #Covid19Death
44 வது GST கவுன்சில் கூட்டம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது.
#gst
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
#PetrolPrice #DieselPrice #Hike
புதுச்சேரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரை போலிசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி மனவெளியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவரது நண்பர் ரியாஸ் என்பவர் மூலம் திருவாண்டார்கோயில் பகுதியை சேர்ந்த் 12 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பாக பழகுவதாக கூறி சிறுமியிடம் பேசி வந்த ரஞ்சித் அவரிடம் நேரில் பேச வேண்டும் என கூறி திருக்கனூர் அழைத்து வந்து தன் நண்பர்களான தினேஷ், பிரசாத், திவ்யநாதன் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதனை அடுத்து வீட்டுக்கு செல்லலாம் என்று கூறி திருக்கனூர் சரஸ்வதி நகரில் உள்ள திவ்யநாதன் வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்று, நான்கு பேரும் சேர்ந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில், அதிர்ச்சி அடைந்த சிறுமி அங்கிருந்து தப்பியோடி தனது தந்தையுடன் நடந்ததை கூறி அழுதுள்ளார். இதையடுத்து, சிறுமியுடன் திருக்கனூர் காவல் நிலையம் சென்று இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், 4 இளைஞர்களையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
#pocso act
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தமிழகத்திற்கு இதுவரை 4584 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளது என மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது
நாடு முழுவதும் 409 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம், 1684 டேங்கர்களில் 29185 மெட்ரிக் டன் மருத்துவ பயன்பாடு ஆக்சிஜன் பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது 7 ரயில்கள் 551 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் பயணத்தில் உள்ளது.
தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, டெல்லி, உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், அசாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை ஆக்சிஜன் பெற்றுள்ளன.
இதுவரை தமிழகத்திற்கு 4584, மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3797 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன், டெல்லிக்கு 5722 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 2354 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 3564 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன்,
ஆந்திராவுக்கு 3364 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், கேரளாவுக்கு 513 மெட்ரிக் டன், தெலங்கானாவுக்கு 2851 மெட்ரிக் டன், ஜார்கண்டிற்கு 38 மெட்ரிக் டன், அசாமிற்கு 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
#ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்