#mybuddys coimbatore கோவை:-போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தவர்களிடம், போலீசார் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பது குறித்து கருத்து கேட்கும் புதிய திட்டம், மாநகர போலீசில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பொதுவாக 'இ-காமர்ஸ்' முறையில் ஒரு பொருளை வாங்கினாலோ, உணவு நிறுவனங்களிடம் உணவு ஆர்டர் செய்தாலோ, அவர்களின் சேவை எவ்வாறு இருந்தது என்பது குறித்து அறிந்து கொள்ள, வாடிக்கையாளர்களிடம் கருத்து கேட்கப்படும்.வாடிக்கையாளர்கள் தரும் 'ரேட்டிங்'கை பொறுத்து, குறிப்பிட்ட நிறுவனத்தின் சேவை எவ்வாறு இருந்தது என, அறிந்து கொள்ளலாம். அதுபோன்ற ஒரு புதிய திட்டத்தை, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர், மாநகர போலீசில் அறிமுகப்படுத்தியுள்ளார்.இத்திட்டத்தின்படி, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கும் நபருக்கு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் நேரடியாக, போன் செய்து கருத்து கேட்பார்கள்.'போலீஸ் ஸ்டேஷனில் உங்களின் புகார் எவ்வாறு விசாரிக்கப்பட்டது, புகாரை யார் விசாரித்தார்கள், ஸ்டேஷனில் உங்களை மரியாதையாக நடத்தினார்களா, போலீசாரின் செயல்பாடு உங்களுக்கு திருப்தி அளித்ததா...' என்பன போன்ற கருத்துக்கள் கேட்கப்படுகின்றன.இந்த கருத்துக்களின் அடிப்படையில், மாநகரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பொதுமக்களிடம் எவ்வாறு போலீசார் நடந்து கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.இத்திட்டத்துக்கு, பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.இத்திட்டம் குறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் கூறியதாவது:பொதுமக்களுக்கு போலீ சாரின் சேவை தரத்தை அதிகரிக்கும் நோக்கில், இந்த புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. எந்த ஒரு நல்ல சேவையையும், பொதுமக்களுக்கு வழங்குவதில் கருத்து கேட்பு தகவல்கள் திரட்டப்படுவது மிகவும் முக்கியமாகும். இதன்மூலம் போலீஸ் தரப்பில் தவறுகள் ஏற்பட்டால், அதனை சரிசெய்து, மக்கள் எதிர்பார்க்கும் சேவையை வழங்க முடியும்.இதற்காக, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் உள்ள வரவேற்பாளர்கள், புகார் அளிக்க வரும் பொதுமக்களின் மொபைல்போன் எண்களை, சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் எண்கள் தினமும் மதியம் மற்றும் மாலை என, இரு வேளைகளில் மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு அளிக்கப்படும்.கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருக்கும் போலீசார், புகார் அளித்த பொதுமக்களின் மொபைல்போன் எண்களுக்கு, போன் செய்து கருத்து கேட்பார்கள். அதன் அடிப்படையில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களின் செயல்பாடுகளும் தெரிந்துவிடும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.போலீசார் எப்படி நடந்து கொண்டனர்?இரண்டு நாட்களுக்கு முன், அனைத்து மகளிர் மத்திய பகுதி போலீசில் புகார் அளித்த பி.என்.புதுாரை சேர்ந்த திவ்யா, 32 என்பவர் கூறுகையில், ''நான் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் குறித்து அன்றைய தினம் மாலை, கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார், என்னை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஆச்சரியமாக இருந்தது.போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் எவ்வாறு நடந்து கொண்டனர், உங்களது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதா, புகாரை விசாரித்த அதிகாரி யார், உங்கள் பார்வையில் போலீசாரின் நடவடிக்கை எவ்வாறு இருந்தது என, கருத்து கேட்டனர். இதற்கான பதிலை அளித்தபின், போலீசாரின் சேவைகளுக்கு 'நன்று', 'மிக நன்று', 'மோசம்' என, 'ரேட்டிங்' கேட்டு பெற்றனர்,'' என்றார்.
Download Mybuddys app to like , share and comment!