தமிழகத்துக்கு தடுப்பூசிகள் எப்போது அனுப்பப்படும் என்பது ஜூன் 6ம் தேதிக்கு பிறகே தெரியும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் ;- ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய அரசிடம் இருந்து இந்த மாதத்திற்கான 1.74 லட்சம் தடுப்பூசி டோஸ் வரவேண்டியுள்ளது. கடந்த மாதம் தமிழகத்திற்கு 2 மடங்கிற்கு மேல் தடுப்பூசி டோஸ் ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு கூறியது. தற்போது இருப்பில் உள்ள தடுப்பூசிகளை ஆட்சியர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
#covid19