#tamil ☝️☝️☝️ மதுரவாயலில் சாலையைக் கடக்கமுயன்ற எருமையின் மீது பேருந்து மோதியதால் பரபரப்பு. .மதுரவாயல் மார்கெட் பகுதியில் வசிப்பவர் குணசேகர் இவர் மாடுகளை வைத்து பால் விற்பனை செய்து வருகிறார் .நேற்று இரவு மேய்ச்சலுக்காக சென்ற இவரின் எருமை மாடு ஒன்று மதுரவாயல் மார்கெட் சிக்னல் அருகே சாலையைக் கடக்க முயலும்போது பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்து மாட்டின் மீது பலமாக மோதியது இதில் காயமடைந்த மாடு நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்ததால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெறிசல் ஏற்ப்பட்டது பின்னர் அப்பகுதிக்கு வந்த போக்குவரத்து காவலர்கள் அங்குள்ள பொதுமக்களின் உதவியுடன் விபத்தில் சிக்கிய மாட்டை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர் . அதன் பின்னர் மாட்டின் உரிமையாளர் மற்றும் பேருந்து ஓட்டுனர் ஆகிய இருவரிடமும் சமாதான் பேசி அனுப்பிவைத்தனர் . இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெறிசல் ஏற்ப்பட்டது. இந்தப் பகுதியில் கவனிப்பாரற்று சாலையில் சுற்றுத் திறியியும் மாடுகளால் இங்கு பலமுறை விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.