மாணவர்களுடன் கலந்துரையாடல்

News courtesy: உள்ளாட்சி முரசு
#கல்விக்குழுதலைவர் #கோவைமாநகராட்சி

image

#கல்விக்குழுதலைவர் ஆய்வு
இன்றுஆய்வு 11/5/2022 காலை 11:30 மணிக்கு காந்திபுரம் Dr.நஞ்சப்பா சாலையில் உள்ள அனுப்பர்பாளையம் மாநகராட்சி பள்ளிக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டேன்..
அந்தப்பள்ளிக்கு சிறு சிறு தேவைகள் நிறைய இருக்கிறது..

அவற்றையெல்லாம் பட்டியல் இட சொல்லி வந்திருக்கிறேன். கூடுமானவரை அந்தத்தேவைகளை எல்லாம் பள்ளியைசுற்றியுள்ள வியாபார நிறுவனங்களிடமிருந்தும், நன்கொடையாளர்களிடமிருந்து பெற முடிவு செய்துள்ளோம்.

இருபாலரும் கற்கும் அப்பள்ளிக்கு வகுப்பறைகள் நிறைய உள்ளது..நூலகம் மற்றும் பரிசோதனைக்கூடம் போன்றஅனைத்து வசதிகளும் நிறைவாகவே உள்ளது.
ஆனால் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே அவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முயற்சிகள் எடுக்கப்படும்.

பொது மக்களிடமிருந்து மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.